Bypass surgery - 7-Year-Old Child - MGM Healthcare | Best Super-MultiSpecialty Hospital in Chennai
Back Online Media

Bypass surgery – 7-Year-Old Child

8 Jan, 2024

சென்னை மாநகரின் பன்முக சிறப்பு பிரிவுகளுடன் சிறப்பான சேவையாற்றி வரும் உயர்நிலை மருத்துவமனையான எம்ஜிஎம் ஹெல்த்கேர், ஆந்திரப்பிரதேஷைச் சேர்ந்த 7 வயதே ஆன சிறு குழந்தைக்கு ஏற்பட்டிருந்த மோயாமோயா என்ற அரிதான நோய்க்கு சிகிச்சையளிக்க மூளையில் பைபாஸ் (மூளையில் மறுநாளப்பெருக்கம்) சிகிச்சையை வெற்றிகரமாக செய்திருப்பதை பெருமையுடன் அறிவித்திருக்கிறது. குழந்தைப் பருவத்தின் போது பொதுவாக ஏற்படக்கூடிய இந்த அரிதான நிலையானது, ஏறக்குறைய 10 இலட்சம் நபர்களில் ஒருவரை பாதிக்கிறது.

பக்கவாதம் மற்றும் வலிப்புத்தாக்க நிகழ்வுகள் பலமுறைகள் ஏற்பட்டதற்குப் பிறகு 2023 செப்டம்பர் மாதத்தில் நீண்ட காலமாக உணர்விழந்த நிலையில் இருந்த குழந்தை ஸ்ரீவித்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற சிறுமியை அவளின் பெற்றோர்கள் ஆந்திரப்பிரதேசத்திலிருந்து சிகிச்சைக்காக அழைத்து வந்திருந்தனர்

ஒரு விரிவான பரிசோதனைக்குப் பிறகு, எம்ஜிஎம் ஹெலத்கேர் – ன் நரம்பியல் அறுவைசிகிச்சை மையத்தின் இயக்குனர் டாக்டர். ரூபேஷ் குமார் மற்றும் அத்துறையின் மருத்துவர்கள் குழு இச்சிறுமிக்கு மூளையில் ஆஞ்சியோகிராம் சோதனையை செய்தது. இரத்தஓட்டத்தைப் பார்ப்பதற்காக நோயாளியின் மூளைக்குள் சாயத்தை உட்செலுத்துவதை உள்ளடக்கிய ஒரு நோயறிதல் செயல்முறை இது. இச்சோதனையின் வழியாக இச்சிறுமிக்கு ஏற்பட்டிருப்பது மோயாமோயா நோய் என்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

பெரும்பாலும் குழந்தைகளிடம் அடையாளம் காணப்படும் மோயாமோயா நோய்களில், மூளையிலுள்ள இரத்தநாளங்கள் சுருங்கி, குறுகலாகவும் மற்றும் இரத்தஓட்டம் தடைபட்டதாகவும் இருக்கும். மோயாமோயா என்ற ஜப்பானிய வார்த்தைக்கு புகை மூட்டம் என பொருள் கொள்ளலாம். இரத்தநாளங்கள் அடைபட்டிருக்கும் நிலையில் அவற்றிற்கு மாற்றாக, சிறு நாளங்கள் தோன்றுவதை இது குறிப்பிடுகிறது. இந்த பாதிப்புடைய நோயாளிகளுக்கு சிறிய பக்கவாத (ஸ்ட்ரோக்) தாக்குதல், இரத்தநாளம் பலூன் போல விரிவடையும் நிலை அல்லது மூளையில் இரத்தக்கசிவு ஆகியவை ஏற்படுவதற்கான இடர்வாய்ப்புகள் அதிகமிருக்கும். மூளையின் இயக்கத்தை இது பாதிக்கும்; அறிவுத்திறன் மற்றும் வளர்ச்சி தாமதங்களை அல்லது திறனிழப்புகளை குழந்தைகளிடம் விளைவிக்கும்.

எம்ஜிஎம் ஹெல்த்கேர் – ன் நரம்பியல் அறுவைசிகிச்சை மையத்தின் இயக்குநர் டாக்டர். ரூபேஷ் குமார் மற்றும் அத்துறையின் சிறப்பு நிபுணர்கள் டாக்டர். சரன்யன், டாக்டர். ஹரீஷ் சந்திரா, டாக்டர். ஆர். பாபு மற்றும் இணை சிறப்பு நிபுணர் டாக்டர். ராஜேஷ் மேனன் ஆகியோரை உள்ளடக்கிய மருத்துவர் குழு இச்சிறுமிக்கு மூளையில் இரத்தஓட்டத்தை மீண்டும் உருவாக்குவதற்காக மூளையில் பைபாஸ் அறுவைசிகிச்சையை செய்திருக்கிறது.

இச்சிறுமியின் இரத்தநாளங்கள் 1 மி.மீட்டருக்கும் குறைவானதாக இருந்ததால், இந்த மூளை அறுவைசிகிச்சை மிக கடினமானதாக இருந்தது. எனினும், சிறு இரத்தநாளங்களுக்கு இணைப்பு நிலையை உருவாக்கிய மற்றும் இரத்தஓட்டத்தை அதிகரித்திருக்கும் இந்த பைபாஸ் சிகிச்சை இச்சிறுமிக்கு மறுபிறப்பை தந்திருக்கிறது என்றே குறிப்பிடலாம்.

Recent Posts
MGM Healthcare performs five transplant surgeries in 30 hours
22 Jun, 2024
DT News Online: MGM Healthcare Performs Historic Back- to -Back Heart and Lung Transplants
22 Jun, 2024

Sign up to receive
communications from us